Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாநகராட்சிப் பணி முடிந்ததும் அதே இடத்தில் ஆதித்தனார் சிலை... அதிகாரிகள் தகவல்!

'மாநகராட்சிப் பணி முடிந்ததும், அகற்றப்பட்ட அதே இடத்தில் ஆதித்தனார் சிலை அமைக்கப்படும்'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூரில், தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனாரின் சிலை அகற்றப்பட்டுள்ளதால், அந்த வழியே செல்பவர்கள்,  வெறுமையாய் இருக்கும்  ரவுண்டானாவைப் பார்த்தபடி செல்கின்றனர். 30 ஆண்டுகளாக இருந்த சிலை திடீரென்று இல்லாமல் போனதால், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. போலீஸ் கமிஷனர் ஆபீஸ் சாலை (ஆதித்தனார் சாலை)யும், பாந்தியன் சாலையும் இணையும் இடத்தில் அமைந்திருந்த ஆதித்தனார் சிலை என்ன ஆனது? சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம், 

ஆதித்தனார்

"ஆதித்தனார் சிலை அமைந்துள்ள இடம், கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி. உள்வட்டச் சாலையைச் சேர்த்து, இந்தச் சந்திப்பை பத்து சாலைகள் தொடுகின்றன. ஆகவே, இந்த ரவுண்டானாவில் உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்து சிக்னல் விளக்கு மற்றும் அதே தரத்தில் ராட்சத விளக்கு பொருத்தும் முடிவை எடுத்தோம். இது, ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யும் பணியையும் இத்துடன் சேர்த்தே முடிக்க நிதி ஒதுக்கப்பட்டு,  வேலையைத் தொடங்கிவிட்டோம்.பணிமுடியும் வரையில், ஆதித்தனார் உருவச்சிலையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதாக, தினத்தந்தி குடும்பத்தாரே கேட்டுக்கொண்டதால், சிலையை நேற்றுமுன் தினம்  அவர்களிடம் ஒப்படைத்தோம். பணி முடியப் பெற்றதும் மீண்டும் அந்த இடத்தில் ஆதித்தனார் சிலை  நிறுவப்படும்" என்றனர்.

தினத்தந்தி குழுமத்தின் அதிபரான சி.பா. ஆதித்தனார் சிலையை, 1987-ல் முதல்வர் எம்.ஜி.ஆர் இங்கே திறந்து வைத்தார். சிலை அமைந்துள்ள சாலைக்கு, ஆதித்தனார் சாலை என்றும் பெயரிடப்பட்டது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement