கேரளாவில் கள்ளநோட்டைப் புழக்கத்தில் விட்ட தமிழர்கள் கைது

கேரளாவில், கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்ட தமிழர்களைப் பாலக்காடு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கள்ள

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஒரு பழக்கடையில், இரண்டு நாள்களுக்கு முன் ஒரு குடும்பம் பழங்களை வாங்கிக்கொண்டு 500 ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்துள்ளார்கள். கடைக்காரருக்கு அந்தப் பணத்தின் மீது சந்தேகம் எழுந்தது. உடனே 500 ரூபாயைப் பரிசோதனை செய்ததில், அது கள்ளநோட்டு என்று தெரியவந்தது. இந்தத் தகவலை, பாலக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்குத் தெரிவித்தார், கடைக்காரர். வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திய போலீஸ், அந்தக் குடும்பம் கள்ளநோட்டு கும்பல் எனக் கண்டுபிடித்தனர். அவர்கள், திருச்சூர் அருகே மண்ணூத்தி பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பாலக்காடு போலீஸார் மண்ணூத்தி போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, வாகனச் சோதனையில் ஈடுபட்ட மண்ணூத்தி போலீஸார், அந்த வழியாக வந்த காரை சோதனைசெய்தபோது, ரூபாய் 5 லட்சம் கள்ள நோட்டுகள் 500, 2000 நோட்டுகளாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதனைக் கொண்டுசென்ற நான்கு பேரையும் கைதுசெய்தனர். விசாரணையில், அந்த நான்கு பேரும் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள்தான் பாலக்காடு பழக்கடையில் கள்ளநோட்டைக் கொடுத்து ஏமாற்றியதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில், கடந்த நான்கு வருடங்களாக கேரளாவில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதும் தெரிய வந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!