Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்பு: - தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் ஓட்டல்கள் கடையடைப்பு..!

ஜிஎஸ்டி வரி விதிப்புச் சட்டத்துக்கு எதிராக, தென் மாநில ஓட்டல்கள் இன்று ஒருநாள் அடையாள கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதுவரை, 50 லட்ச ரூபாய்க்குக் குறைவாக வருமானம் வரும் ஓட்டல்களுக்கு, சேவை வரி 0.5 சதவிகிதம் வரிவிதிக்கப்பட்டுவருகிறது. தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில், இந்தச் சேவை வரி 5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 50 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் வரும் ஓட்டல்களுக்கு 2 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏ.சி வசதி உள்ள ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களுக்கு 8 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வரி விதிப்பு முறை, ஜூலை மாதத்திலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைக் கண்டித்து, தென் மாநிலம் முழுவதும் உள்ள ஓட்டல்கள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஓட்டல்கள் மூடப்படும் என்றும், சென்னையில் மட்டும் 15,000 ஓட்டல்கள் வரை அடைக்கப்படும் என்றும் ஓட்டல்களின் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம், கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் முழுவதும் சுமார் 5 லட்சம் கடைகள்  வரை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி தொடர்பாக, ஓட்டல் சங்கங்கள் மத்திய அரசுடன் ஜூன் 5 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. அதில் உடன்பாடு எட்டாதபோது, அடுத்தகட்டப் போராட்டம்குறித்து அறிவிக்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement