Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக போர்க்கொடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தருக்கு, தொடர் எதிர்ப்பலைகள் எழுந்துவருகின்றன. நேற்று, பிஆர்ஓ பதவிக்கான நியமனத்தில் துணைவேந்தர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என, பல்கலைக்கழகப் பதிவாளர் தனது பதவியை ராஜினாமாசெய்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்


தமிழகத்தில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூன்று பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் நியமனத்தின் பேரில், கடந்த 27 ஆம் தேதி மதுரை மற்றும் சென்னைப் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டனர். முதல் நாளிலேயே, மதுரை துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன.

வந்த முதல் நாளிலேயே, துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்துக்கு பல்கலைக்கழக வட்டாரத்தினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, செல்லத்துரையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பல்கலைக்கழகப் பதிவாளர் தனது பதவியை ராஜினாமாசெய்தார். அதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலரும் தொடர்ச்சியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தினுள் முறைகேடுகள் அதிகம் நடப்பதாகவும், துணைவேந்தர் மீது அதிக குற்றச்சாட்டுகள் பதிவாகின்றன என்றும் குற்றம்சாட்டி, மதுரையில் பல இடங்களில் துணைவேந்தர் செல்லத்துரைக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement