Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பறிமுதல் செய்யப்படவுள்ள ஜெயலலிதாவின் சொத்துகள் இவைதாம்..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரின் 68 சொத்துகளைப் பறிமுதல்செய்யும் பணியைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. 


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவர்களின்  சொத்துகளைப் பறிமுதல்செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தற்போது, தமிழக அரசு இந்தப் பணியைத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, மாநில லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பறிமுதல் செய்யப்படவேண்டிய சொத்துகள் அடையாளம் காணப்பட்டு, அந்தச் சொத்துகளுக்கு அருகில் அரசுக்குச் சொந்தமானது என்று போர்டு வைக்கப்படும் என்று தெரிகிறது. சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், ஏலம் விடப்படலாம் என்றும் தெரிகிறது. சென்னை டி.டி.கே சாலையிலுள்ள லெக்ஸ் புராப்பர்ட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் நுங்கம்பாக்கம், நீலாங்கரையிலுள்ள நிலங்கள் பறிமுதல் செய்யப்படவேண்டிய சொத்துகள் பட்டியலில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரிவர்வே அக்ரோ நிறுவனத்துக்குச் சொந்தமான 1,667 ஏக்கர் நிலமும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூரிலுள்ள நிலங்களும் பறிமுதல் செய்யப்படவேண்டிய நிலங்கள் பட்டியலில் உள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement