Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாட்டிறைச்சித் தடைச் சட்டத்திற்கு உயர்நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் - தமிழிசை அடடே விளக்கம்

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டிருக்கும் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் திட்டம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளளார். 


கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மிருகவதை தடுப்புச் சட்டத்தைத் தவறாக தமிழகத்தில் முன்னிறுத்துகிறார்கள். பசுவதை தடுப்புச் சட்டத்தை, மாட்டிறைச்சித் தடை சட்டம் என்று முன்னிறுத்தி  ஏழு கட்சிகள் சேர்ந்து அறிக்கை கொடுத்துள்ளதாக அறிகிறேன். விதிமுறைகள் மீறி மாடுகளை மிகக் கொடூரமாகக் கொன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதற்குதான் இந்தச் சட்டம்.

ஆனால், இதை வேறு விதமாக முன்னிறுத்துகிறார்கள். இது விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுத்தும் திட்டம். நம்மாழ்வார்கூட அதைத்தான் சொல்லியிருக்கிறார். பிரதமர் மோடி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். ரஜினிகாந்த் அவரது வேலையை பார்க்கிறார். மோடியும் ரஜினியும் சந்தித்தார்கள் என்பது வதந்தி. தனித்தமிழ்நாடு, திராவிட நாடு என்ற கோஷங்களைப் பிரிவினைவாதிகள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்கள் இதுபோன்ற விஷக் கருத்துகளில் ஆட்பட்டுவிடக்கூடாது. தேசிய உணர்வோடு செயல்படவேண்டும். மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டதற்கு எல்லோரும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவர் தொடர்ந்து விஷக் கருத்துகளை தடை செய்யப்பட்ட இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். விதிமுறைகளை மீறியதால்தான் திருமுருகன் இன்று சட்டத்தின் முன் நிற்கிறார். திருமுருகன் காந்தி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டதற்கும் மத்திய அரசிற்கும் தொடர்பு இல்லை. மாடுகள் விற்பனை தொடர்பான தடை உத்தரவிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடைவிதித்துள்ளது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும்' என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement