வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (30/05/2017)

கடைசி தொடர்பு:17:30 (30/05/2017)

மாட்டிறைச்சிக் குறித்த கேள்வி... அதிரவைத்த அமைச்சர் காமராஜின் ரியாக்‌ஷன்!

மத்திய அரசு, கடந்த வாரம் கால்நடை வர்த்தகத்துக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, இறைச்சி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத் தடை விதித்தது. மேலும்,  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி, இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

Kamaraj


மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் ஆளாகத் தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக  பிரதமர் மோடியுடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து,  நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. தமிழகத்திலும், பெரும்பாலான கட்சிகள், இதற்குத் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அ.தி.மு.க-வில் உள்ள இரு அணிகளைப் பொறுத்தவரை, இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கோரிக்கை வைத்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர், இது குறித்து கருத்துக் கூற மறுத்து வருகின்றனர். 


இந்நிலையில் ரேஷன் விநியோகத்துக்காக, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்மார்ட் கார்டு பற்றிய ஆய்வு கூட்டத்துக்கு இன்று காலை மதுரை வந்தார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவரிடம், மாட்டிறைச்சித் தடைப் பற்றி செய்தியாளர்கள் சிலர் கருத்து கேட்டனர். அதற்கு, எதுவும் பேசாமல், இரண்டு கைகளையும் எடுத்து கும்பிட்டுவிட்டு, ரேஷன் விநியோகம் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல ஆரம்பித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க