Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் கொலை!

சென்னையில் பட்டப்பகலில் அனிஃப் என்ற நபரை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.

திருவல்லிக்கேணி அருகே ஐஸ் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் அனிஃப் என்ற நடுத்தர வயதுடையவர், மதிய தொழுகையை முடிப்பதற்காக அருகேயுள்ள மசூதிக்குச் சென்றிருக்கிறார். தொழுகையை முடித்து நடந்தே வந்திருக்கிறார். ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் அருகே சுமார் 3.15 மணியளவில் வந்துக்கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் வந்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் அனிஃபை கத்தியால் இதயப்பகுதியில் பலமாக குத்தியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை காவலர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாமாக இறந்துவிட்டார். கத்தியால் குத்திய அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். 

கொலையை நேரில் பார்த்தவர்களிடம் விசாரித்தபோது, கொலையாளிகளும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்று கூறுகின்றனர். மேலும், இன்று காலையில் கொலையாளிகளுக்கும், அனிஃப்க்கும் பைக் நிறுத்தும்போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோபத்தில், கத்தியால் குத்தியிருக்கலாம் அல்லது உள்நோக்கம் ஏதேனும் இருக்கலாம் என்றனர். இதுபற்றி காவலர்கள், அருகிலிருக்கும் கடையிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருக்கும் ஆதாரங்களைக்கொண்டு விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம். குற்றவாளியைப் பிடித்துவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement