Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“ஜீரோ பட்ஜெட்ல வாட்ஸ்அப் மூலமா இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறோம்! - கலக்கும் இல்லத்தரசிகள்

வாட்ஸ்அப்

ன்னிக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தாத பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆன்லைனில் கலக்குவதில் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என அங்கிங்கெனாதபடி எங்கும் இறங்கி அடிக்கும் பெண்களும் அதிகம். வெட்டி அரட்டை, ஜாலி பகிர்வுகள் என எத்தனை குழுக்களாக பெண்களின் வாட்ஸ்அப் இயங்குகிறது தெரியுமா? இதில், வாட்ஸ்அப் தளத்தைத் தங்களது பிசினஸ் தளமாக மாற்றிக்கொண்டு மாதம் இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் கில்லிகள் இருக்கிறார்கள். இதோ அவர்களின் ஜீரோ பட்ஜெட் அனுபவப் பகிர்வுகள்... 

சென்னையைச் சேர்ந்த ராதா, தமிழகத்தின் பல ஊர்களிலும் மொத்த வியாபாரிகளிடம் வாங்கிய சேலை மற்றும் சுடிதார் ரகங்களை, தனது நட்பு வட்டத்தில் பிராட்காஸ்ட் செய்து விற்பனை செய்துவந்தார். இதில் கிடைத்த ஆயிரக்கணக்கான நண்பர்களை இணைத்து, வாட்ஸ்அப்பில் எந்த முதலீடுமின்றி தொடர்கிறார். புதிய நண்பர்களைப் பிடிக்க அவ்வப்போது பிராட்காஸ்டும் செய்கிறார். 

‘‘ராதூஸ் ஃபேஷன்ஸ் என்பது நான் செய்யும் பிசினஸின் பெயர். எனக்கு டிரஸ்ஸிங்ல ரொம்ப ஈடுபாடு. நானே மேட்ச் பண்ற சாரீஸ், அதுக்காக வாங்கிச் சேர்த்த அணிகலன்கள் என்னை ஸ்பெஷலா வாட்ஸ் அப்காட்டும். இதுவே பல பெண்களையும் எனக்குத் தோழிகளாக மாத்திச்சு. அவங்களுக்கு ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சு அதுவே பிசினஸாகவும் மாறுச்சு. ஒரு ஜவுளிக்கடையை ஆரம்பிச்சு நடத்த குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாயாவது தேவைப்படும். வாடகை, ஆட்களை வேலைக்கு நியமிக்கிறதுன்னு ஒரு மாதம் பிசினஸை நடத்துறதுக்கான ரன்னிங் காஸ்ட், கடனுக்கான வட்டி இப்படிக் கணக்குப் போட்டால் அது பெரிதாக வளர்ந்து நிற்கும். சம்பாதிக்கும் லாபத்தை எல்லாம் இதுவே விழுங்கிடும். வாட்ஸ்அப்ல எத்தனையோ குரூப்ஸ் உருவாக்குறோம். இதையே பிசினஸ் மாடலா மாற்றலாமேனு ஆன்லைனில் தேடிப் பார்த்து அதுக்கான டீலரைப் பிடிச்சேன். அதன் கிளைகள் நம்ம ஊரில் இருக்கும். நேரில் விசிட் அடிச்சு நம்ம சந்தேகங்களைத் தீர்த்துக்கலாம். ஆசிரியைகள், ஐ.டி இன்டஸ்ட்ரி எனப் பல துறைகளில் ஆயிரக்கணக்கான தோழிகள் இருக்காங்க. புதுசா வரும் சாரீஸ், சல்வார், டாப்ஸ், பெல்ட், ஹேண்ட்பேக். செப்பல்ஸ் என எல்லாவற்றையும் சேல்ஸ் பண்றேன். வாட்ஸ்அப் டேட்டாவுக்கான சிறிய செலவு மட்டும்தான். மற்றபடி இது ஜீரோ பட்ஜெட் பிசினஸ். வாட்ஸ்அப்ல இமேஜ் அனுப்பி ஓகே வாங்கிடலாம். மாசம் இருபதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். பண்டிகை காலங்களில் அதிகம் கிடைக்கும்’’ என்கிறார் ராதா. 

இந்த ஆன்லைன் பிசினஸில் பிரச்னை எதுவும் வராதா? 

ஈரோட்டைச் சேர்ந்த வித்யா லட்சுமி, ‘‘ 'பர்வதவர்த்தினி பொட்டிக்' என்கிற பெயரில் வாட்ஸ்அப் மூலம் சாரீஸ் மற்றும் சுடிதார்ஸ் சேல்ஸ் பண்றேன். ஒரு சில மெட்டீரியல்ஸை நானே வாங்கி யூஸ் வாட்ஸ்அப்பண்ணிப் பார்த்திருக்கேன். டீலர்ஸ்கிட்ட பேசுறேன். புகார் எதுவும் இருக்கக் கூடாதுன்னு சொல்லிடுறேன். பார்சலில் வரும் பொருள்களில் டேமேஜ் இருந்தாலும் திரும்பிக் கொடுத்து மாத்திக்கவும் வாய்ப்பு இருக்கு. இந்த பிசினஸில் கேஷ் அண்டு கேரி என்பதால் கடன் கொடுத்துச் சங்கடப்பட வேண்டியதில்லே. டிராவல் பண்ண வேண்டியதில்லே. இப்படி நைன்ட்டி பெர்சன்ட் பிளஸ் பாயின்ட்தான். அபூர்வமாக சில பிரச்னைகள் வந்தாலும் சரிபண்ணிடலாம். ஸோ, வாட்ஸ்அப் பிசினஸில் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாயும் லாபமே’’ என்கிறார். 

சேலம் அம்பிகா: இரண்டாவது குழந்தை பிறந்து ஆறு மாதங்களில் 'விஸ்வாக் கலக்ஷன்ஸ்' என்கிற பெயரில் வாட்ஸ்அப் குரூப்பில் சேலை மற்றும் மேட்ச்சிங் அணிகலன்களையும் சேர்த்து பிசினஸ் செய்கிறார் அம்பிகா. மாலையில் டியூசன், பைனான்ஸ் மற்றும் ஒன்கிராம் ஜூவல்லரி என்று பிசினஸ் வுமனாக வளைய வந்த அம்பிகாவின் ஸ்பெஷல், பார்க்கும் யாரோடும் நட்பாகிவிடுவதுதான். இன்னர் வீல், லேடீஸ் சர்க்கிள், ரோட்டரி, ஜேசீஸ் போன்ற கிளப்களில் மெம்பராகி ஆயிரக்கணக்கானோரைத் தனது நட்பு வட்டத்தில் இணைத்திருக்கிறார். 

வாட்ஸ்அப் பிசினஸ் சுவாரஸியங்கள் குறித்து பேசிய அம்பிகா, ‘‘குழந்தைகளுக்கான நேரத்தை வேலையில் தொலைத்துவிடக் கூடாது என்பதில் ஸ்ட்ரிக்டாக இருந்தேன். சின்னச் சின்ன பிசினஸ் வாட்ஸ்அப்வாய்ப்புகளை எப்பவும் நட்பு வட்டத்துல ஏற்படுத்திக்கிறேன். நான் ஒரு வாட்ஸ்அப் பிசாசு. போனைத் தொட்டாலே கண்கள் வாட்ஸ்அப் பார்க்காமல் திரும்பியதில்லை. இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாட்ஸ்அப் வழியாக உலகில் நடக்கும் மாற்றங்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். இதையே பிசினஸ் மாடலா மாற்றலாமேனு முடிவுப் பண்ணினேன். போன் கான்டாக்ட்ஸ்தான் முதலீடு. போனில் பேசவேண்டியதை நான் பார்த்துப்பேன். என் கணவரும் உதவறார். வித்தியாசமான வெரைட்டீஸ் ட்ரெண்டியாவும் வேணும். இன்னிக்குப் பெண்கள் ஒவ்வொரு நாளும் புதுசா தெரியணும்னு விரும்புறாங்க. டிரெஸ்ஸுக்கு மேட்சிங்கா கம்மல், நெக்செட், வளையல்னு தேடி அலைவாங்க. அதையெல்லாம் செட்டா கொடுத்துடறேன். வாட்ஸ்அப்ல வாங்கும் விற்கும் ரெண்டு பேருக்குமே பல செலவுகள் மிச்சமாகுது. வாட்ஸ்அப் பிசினஸுக்கு அப்புறம் என்னோட ஃப்ரெண்ட் லிஸ்ட் எண்ணிக்கை கூடிட்டே போகுது. குறைந்த லாபத்தையே பிக்ஸ் பண்றேன். அதனால், கூடுதல் பிசினஸ் கிடைக்குது. மாசம் பதினைந்தாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்’’ என்கிறார். 

வாட்ஸ்அப்பையும் பிசினஸில் சிகரம் எட்டும் இவர்களுக்கு ஒரு ஹாட்ஸ் அப்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement