Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐஐடி மாணவர் தாக்குதல்... எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் வேண்டுகோள்!

'மாட்டிறைச்சித் திருவிழாவுக்கு ஏற்பாடுசெய்த ஐஐடி மாணவர் சூரஜ் தாக்கப்பட்ட சம்பவத்தில், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளார்.

சூரஜ்

நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து சட்டத் திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தது. இந்தத் தடை அறிவிப்பு, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக 'மாட்டிறைச்சித் திருவிழாக்கள்' நடைபெற்றன. குறிப்பாக,கேரள மாநிலத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சித் திருவிழாவைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை ஐஐடி-யில் மாட்டிறைச்சித் திருவிழாவை ஏற்பாடுசெய்த சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டார். கல்லூரியில் உள்ள வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சூரஜ் தாக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார், கேரள முதல்வர் பினராயி விஜயன். 'இந்தச் சம்பவம் தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் வலியுறுத்தியுள்ளார்.  மேலும், இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் உணவு சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement