வேப்பேரி முதல் ஓட்டேரி வரை ...எந்நேரமும் கிடைக்கும் மதுபானம்!

சென்னையில், வேப்பேரி மற்றும் ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் மது விற்பனை ஜோராக நடப்பதால், அந்தப் பகுதி பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

டாஸ்மாக்

படிப்படியாக மதுக் கடைகளைக் குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருவதைக் கண்டு 'ஏதோ' என்கிற அளவில் பொதுமக்கள் ஆறுதல்பட்டுக்கொள்கிறார்கள். பெண்களும் வீதியில் இறங்கி புதிதாக அமையவிருக்கும் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளில் உள்ள பாட்டில்களைக் கொட்டி, உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். மதுக்கடைகள் தொடர்பாக  பா.ம.க., வழக்கறிஞர் பாலுவின்  மனுவை விசாரித்த  கோர்ட்,  " 2017, மார்ச் 31 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகள் இயங்கக்கூடாது" என்று   உத்தரவும் போட்டுள்ளது.

தமிழ்நாடு அரசும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைத்து முடிந்தளவு  சேவை செய்துவருகிறது. இந்நிலையில்... அரசு, மது விற்பனை நேரத்தைக் குறைத்தாலும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் 24 மணி நேரமும் தடையின்றி டாஸ்மாக் மதுபானங்கள் கிடைப்பதாக, மது அருந்தாத பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் வேப்பேரி, ஓட்டேரி, புளியந்தோப்பு அயன்புரம், கோயம்பேடு, திருமங்கலம் என்று பல இடங்களில் எந்நேரமும் டாஸ்மாக் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு எளிதில் கிடைப்பதால், பெண்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!