Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாட்டிறைச்சி தடைக்கு எதிரான போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் சபதம்!

மாட்டிறைச்சி மீதான தடையை நீக்க வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் நடைபெற்றுவருகிறது.

 பசு, ஒட்டம், எருமை உள்ளிட்டவற்றை வர்த்தகரீதியாக விற்பனைசெய்ய மத்திய அரசு தடை விதித்தது. அதே நேரத்தில், விவசாயிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளித்தது அரசு. அரசின் இந்த அறிவிப்புக்கு கேரளா, பீகார், மேற்குவங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அரசின் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துவிட்டனர்.

தமிழகத்தில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. சென்னையில் இன்று, தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடந்துவரும் ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைதாங்கியுள்ளார். போராட்டத்தில், தி.மு.க. எம்பி., கனிமொழி, சுப.வீரபாண்டியன் மற்றும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராகவும் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "மாட்டிறைச்சி தடை விவகாரத்தில், தமிழக அரசு மெளனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. மாடு விற்பனைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும். தி.மு.க கூட்டணிக்கட்சிகளும் மாடு விற்பனைக்குக் கட்டுப்பாடு விதித்திருப்பதைக் கண்டித்துள்ளன. மாடு விற்பனைக்கான கட்டுப்பாடுகளால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா நடைபெற உள்ளதால், சென்னையில் மட்டும் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் இன்று நடைபெறும் போராட்டம், முதற்கட்டம் மட்டுமே. மாடு விற்பனைக்குத் தடை விதித்திருப்பது, மோடி அரசின் மிகவும் கொடுமையான செயல். மூன்றாண்டு காலத்தில், மோடி அரசு செய்த சாதனை என்று கூறு எதுவுமில்லை. லோக்பால் அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை" என்று குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement