வெளியிடப்பட்ட நேரம்: 02:38 (01/06/2017)

கடைசி தொடர்பு:10:07 (01/06/2017)

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மீண்டும் தீ... அணைக்கும் பணிகளில் தாமதம்!

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 7-வது மாடியில் மீண்டும் தீ பிடித்துள்ளது. தீயணைக்கும் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அணைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தீ

சென்னை தி.நகரில், ஏழு மாடி கட்டடத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை செயல்பட்டுவந்தது. இந்தக் கடையில், இன்று அதிகாலை தீப்பிடித்ததாக அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து மணிக்குத் தொடங்கிய தீயணைக்கும் பணி இப்போதுவரை நடந்துவருகிறது. தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 7-வது தளத்தில் மீண்டும் தீ பிடித்துள்ளது. இதனால் அங்கு அதிகளவிலான புகை வெளியேறி வருகிறது. தற்போது 20 மணி நேரத்துக்கு மேலாக எரியும் தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், தீயை அணைக்க பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அணைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.