சென்னை சில்க்ஸ் தீ விபத்து... ஒரு பகுதி கட்டடம் இடிந்தது!

சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, தற்போது ஒரு பகுதி கட்டடம் இடிந்து விழுந்துவிட்டது.

தீ

சென்னை தி.நகரில், ஏழு மாடி கட்டடத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் நகைக்கடை செயல்பட்டுவந்தது. இந்தக் கடையில், நேற்று அதிகாலை தீப்பிடித்ததாக அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிகாலை ஐந்து மணிக்கு தொடங்கிய தீயணைக்கும் பணி, 24 மணி நேரத்தை நெருங்கி, இப்போது வரை நடந்துவருகிறது. தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.

இதனிடையே, தற்போது கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. 7-வது தளத்தில் மீண்டும் தீ பரவியதால், வலது புறச்சுவர் முழுவதும் இடிந்துள்ளது. இதனால், அந்தப் பகுதியில் கடுமையான புகை வெளியேறிவருகிறது. இதில் 7-வது மாடியில் இருந்து 2-வது மாடி வரை இடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே  தீயை அணைக்கப் பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அணைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!