Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்து - காவல்துறை வழக்குப் பதிவு

சென்னை சில்க்ஸ் கட்டட தீ விபத்து தொடர்பாக, மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். 


சென்னை, தியாகராய நகரில் உள்ள ஏழு மாடிகள்கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில், நேற்று அதிகாலை தீ பிடித்தது. அந்தத் தீ, ஏழு மாடிக்கும் பரவியது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர். ஆனால், இதுவரை தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலை 3.20 மணி அளவில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம், 7-வது தளத்திலிருந்து 2-வது தளம் வரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

பின்னர், முன்பகுதியில் தீ பற்றி எரிந்த நிலையில், காலை 7 மணி அளவில் முன்பகுதியும் இடிந்து விழுந்தது. தீயணைப்புப்படை வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக, மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில், 'தீ விபத்து' என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சென்னை சில்க்ஸ் கட்டடம், விதிமுறையை மீறி கட்டியதாகப் புகார்கள் எழுந்துவருகின்றன.

இந்த நிலையில், சென்னை சில்க்ஸ் நிறுவனமே தானாக முன்வந்து புகார் அளித்துள்ளது. இருப்பினும், கட்டட விதிமீறல்கள்குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்தான் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement