வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (01/06/2017)

கடைசி தொடர்பு:10:57 (01/06/2017)

மாட்டிறைச்சித் தடை உத்தரவை தமிழக அரசு ஏற்காது - அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி..!

'மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்தை தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்க்கும்பட்சத்தில், தமிழக அரசு அந்தச் சட்டத்தை ஏற்காது' என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'தமிழக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதை மு.க.ஸ்டாலின் தவறாகப் பேசுகிறார். தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சியால் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் உள்ள மற்ற கட்டடங்களுக்கும் தீ பரவாமல் தடுக்க முடிந்தது. மாட்டிறைச்சி தொடர்பான சட்டத்தை தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்க்கும்பட்சத்தில், தமிழக அரசு அந்தச் சட்டத்தை ஏற்காது' என்று தெரிவித்தார்.