Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியல்வாதிகளை விளாசும் பழ.கருப்பையா... பா.ஜ.க-வை சாடும் ப.சிதம்பரம்!

இந்து மத அபிமான சங்கத்தின் நூற்றாண்டு விழாவாக இருந்தாலும், அரசியல்வாதிகளை பழ.கருப்பையாவும் பா.ஜ.க அரசை ப.சிதம்பரமும் சாடினார்கள்.

Chidambaram
 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், நகரத்தார் சார்பில் 1917 ஆம் ஆண்டு 'இந்து மத அபிமான சங்கம்' தோற்றுவிக்கப்பட்டது.   பாரதியார், மூதறிஞர் ராஜாஜி, பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் இந்தச் சங்கத்துக்கு வந்து வாழ்த்திய பெருமை உண்டு. இந்தச் சங்கத்தின் நூற்றாண்டு விழா, சத்குரு ஞானானந்த மஹாலில் நடைபெற்றது. நூறு வயதைக் கடந்து, நூற்றாண்டு விழாவுக்கு வருகை தந்திருந்தார், பழனியப்ப செட்டியார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் எம்எல்ஏ. பழ.கருப்பையா போன்றவர்கள் கலந்துகொண்டார்கள். பாரதியார், கானாடுகாத்தானில் வை.சு.சண்முகம்செட்டியார் வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்தார்.

முன்னாள் எம்எல்ஏ., பழ.கருப்பையா பேசும்போது, ’இந்து மத அபிமான சங்கத்தின் பொன்விழா ஆண்டுக்கு, பேரறிஞர் அண்ணா வந்திருக்கிறார் என்றால், இது இந்து மத அபிமான சங்கமாக இருக்கமுடியாது என்று கருதுகிறேன். சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் பேசிவிட்டு வந்தபோது திருவனந்தபுரத்தில் எதிர்ப்பு கிளம்பியது. சைவ சமயம் வைணவ சமயங்களிலிருந்து அந்த எதிர்ப்பு கிளம்பியது. நான் ஒரு இந்து அல்ல. காரணம் மூதாதையர்களான கருப்பன் அய்யனார் காவல் தெய்வங்களையும் உருவ வழிப்பாட்டையும் கொண்டவர்கள்.

இராய.சொக்கலிங்கம் செட்டியார் காங்கிரஸ் கட்சியில் காரைக்குடி நகர்மன்றத் தலைவராக, காங்கிரஸ் கட்சியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். இப்ப இருக்கிற சேர்மன்கள் எல்லாம் அவரிடம் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளத்தூரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதற்கு, சத்தியமூர்த்தி தலைமைதாங்கினார். அப்போது, உட்காரும் நாற்காலி தூசிபடிந்திருந்தது. அந்த இடத்தில் தேசியக் கொடியைத் தவிர வேறு துணியில்லை. உடனே தேசியக்கொடியை எடுத்து துடைத்துவிட்டு மடித்துவைத்தார். இது பெரும்பிரச்னையானது. அப்போது மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். நான் மன்னிப்பு
கேட்கமுடியாது. கொடிக்கம்பத்தில் பறந்தால் அது கொடி. மேஜையில் இருந்தால் அது துணி என்று விளக்கம்சொல்லிவிட்டு அன்றைக்கே கட்சியில் இருந்து வெளியேறினார் இராய.சொக்கலிங்கம். அப்போது இருந்தது ஜனநாயகம். இப்போது எதிர்க் கருத்து சொல்ல யாருமில்லை. ஜனநாயகத்தில் சிறந்த அமைப்பு இல்லை.

ஒரு சமூகம் மாறாமல்,  சட்டமன்றமோ நாடாளுமன்றமோ மாறமுடியாது. எதிர்க் கருத்துகளைச் சொல்ல முடியவில்லை. வானத்தையும் ஹெலிகாப்டர் நிழலையும் பார்த்துக் கும்பிடுகிறான். எப்படி எதிர்க் கருத்தைப் பதிவுசெய்வான். குப்பைமேட்டில் திண்ணும் கோழிகளாக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் கெட்டுச் சீரழிந்துவிட்டன. வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டிய பத்திரிகைத்துறையும் விலைபோய்விட்டது. ஐஏஎஸ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கூட்டுக்கொள்ளை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நீதித்துறை சொல்லவே வேண்டாம், வந்த தீர்ப்புகளைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். மன்னர்கள் அசோகர், பாண்டியர்களைப்போல இருந்தால் ஜனநாயகம் தேவையில்லை. தமிழ்நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய்விட்டது. எதிர்காலத்தைச் சரிசெய்ய, ப.சிதம்பரம் ஒரு முடிவு எடுங்கள் என்று பொடி வைத்து பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசும்போது, 'மொழி, மதம், உணவு போன்றவற்றை அரசியலின் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்து மேலாதிக்கம், கடைசியில் சாதி மேலாதிக்கமாக மாறும். மேலாதிக்கத்தை எதிர்த்துதான் திராவிட இயக்கங்கள் போராடின. மொழி, மதம்,  உணவு போன்றவற்றை ஆயுதமாக மாற்றுவதற்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் தரக்கூடாது. மதம் என்பது பிறப்பின் விபத்து. மதத்தின் பெயரால் ஆதிக்கம் செய்யும்போது, சமூகம் சீரழிந்துவிடும்' என்று பா.ஜ.க செயல்பாடுகளைத் திரைமறைவாகச் சாடினார் ப.சிதம்பரம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close