Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜில்லிடும் தென்னகத்தின் காஷ்மீர்... ரொமான்ஸ் மூடில் மூணாறு!

பிரபல டிராவல் இதழான `Lonely Planet' வரிசைப்படுத்தியிருக்கும் இந்தியாவின் ரொமான்டிக் இடங்களின் பட்டியலில் மூணாறுக்கு முதல் இடம் கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக கேரளா சுற்றுலாத்துறை இயக்குநர் பாலகிரண் குறிப்பிடும்போது, ``சிறந்த ரொமான்டிக் இடமாக மூணாறைத் தவிர நிச்சயமாக வேறு எந்த இடத்தையும் சொல்ல முடியாது. கடந்த வருடத்தைவிட இந்த வருடம் 6.23 சதவிகிதம் அளவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுச் சுற்றுலாப் பயணிகள் கூடுதலாக வருகை தந்திருக்கிறார்கள். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க முயற்சி நடந்துவருகிறது” என்றார்.

மூணாறு

மூணாறை எத்தனை வார்த்தைகளால் வர்ணித்தாலும் `தென்னகத்தின் காஷ்மீர்' என வர்ணிப்பதற்கு இணையாக மற்றவை இருக்காது. அந்த அளவுக்கு காஷ்மீரைப் போன்ற இயற்கைசூழ் நகரமாகத் திகழ்கிறது `மூணாறு'.

குண்டலை, நல்ல தண்ணி, முத்தரப் புழை என்ற மூன்று ஆறுகள் சங்கமிக்கும் ஆறு என்பதால், அந்த ஊருக்கு `மூணாறு' என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ` `ஜான் முன்ரே டேவிட்' என்கிற ஆங்கிலேயர், காடாக இருந்த இந்தப் பகுதிக்கு முதன்முதலாக வந்து ஓர் ஊரை நிர்மாணித்தார்' என்கிறது எழுத்துபூர்வமான வரலாறு. `அந்த ஆங்கிலேயரின் பெயரில் இருக்கும் `முன்ரே' என்ற வார்த்தை மறுவி `மூணாறு' என்றானது' என்கிறது ஒரு தரப்பு.

இதற்கு மேல் வரலாற்றை ஆராயாமல், ஜாலியாகச் சுற்றிப்பார்க்க மூணாறில் என்னென்ன இடங்கள் இருக்கின்றன... பார்க்கலாம்.

மூணாறு

மூணாறில் அதிகமாக நம் கண்களைக் கொள்ளைகொள்வது தேயிலைத் தோட்டங்கள்தான். அதனிடையே வளைந்து நெளிந்து செல்லும் மலைச்சாலைகளைக் காண்பதற்கு அற்புதமாக இருக்கும்.

மூணாறில் இருக்கும் `எதிரொலி மலை' (எக்கோ பாயின்ட்) மிக முக்கியமான இடம். அங்கு குறிப்பிட்ட இடத்தில் நின்று சத்தமாகக்  கத்தினால், அந்த வார்த்தைகள் சில விநாடிகளில் நமக்குக் கேட்கும். இது சிறுவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

மூணாறு மலைப் பகுதியிலுள்ள  ராஜமலைத் தொடரில், அழிந்துவரும் இனமான `வரையாடு'களை நம்மால் பார்க்க முடியும். அதே மலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூக்களையும் பார்க்க முடியும். மூணாறிலிருந்து பார்த்தால், தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமான `ஆனைமுடி சிகரம்' நம் கண்களுக்கு விருந்தளிக்கும். மேலும், மாட்டுப்பட்டி கால்நடைப் பண்ணை,  டாப் ஸ்டேஷன், தேயிலைக் கண்காட்சி, மரையூர் சந்தனக் காடுகள், குண்டலா ஏரி, அட்டுக்காடு நீர்வீழ்ச்சி, மலர் பூங்கா, சின்னாரு வனவிலங்கு சரணாலயம், லக்கோம் நீர்வீழ்ச்சி போன்றவை மூணாறில் பார்த்துப் பரவசம் அடையவேண்டிய முக்கிய இடங்கள்.

மூணாறுக்கான பயணத்தில், மறையூரிலிருந்து மூணாறு வரை இயற்கைக் காட்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கு நோக்கினும் பச்சைப் பசேலென பசுமையின் ஆட்சிதான்.  ரயிலில் செல்லவேண்டும் என்றால் நேராக திண்டுக்கல் வந்திறங்கி, கார் மூலம் மூணாறு செல்லலாம் அல்லது அரசுப் பேருந்து மூலமாகவும் செல்லலாம் அல்லது போடிநாயக்கனூர், உடுமலைபேட்டை வழியாகவும் செல்லலாம். சென்னையி்லிருந்து நேரடியாக மூணாறுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இயற்கையை ரசிக்கும் அனைவரும் அவசியம் சென்று பார்க்கவேண்டிய சுற்றுலா தளம் மூணாறு. அதுமட்டுமல்லாமல், மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் பெஸ்ட் ரொமான்டிக் இடமும் இந்த மூணாறுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close