தமிழக முதல்வருக்குப் பேரன் பொறந்தாச்சு...!!! | TN CM Edappadi Palanisamy become grand father

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (01/06/2017)

கடைசி தொடர்பு:21:11 (01/06/2017)

தமிழக முதல்வருக்குப் பேரன் பொறந்தாச்சு...!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பன்னீர்செல்வத்தின் போர்க்கொடி, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை ஆகியவற்றால், எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அவருக்கு வயது 63.

Edappadi Palanisamy


இவரது மனைவியின் பெயர் ராதா. இவர்களுக்கு மிதுன் என்ற மகன் உள்ளார். மிதுன் பி.இ படித்துள்ளார். மிதுனுக்கும், திவ்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து, கர்ப்பமாக இருந்த திவ்யா, ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று மாலை மிதுன் - திவ்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதன் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாத்தா ஆகியுள்ளார். இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் ஈரோடு சென்று, தனது பேரனைப் பார்க்க தயாராகி வருகிறாராம் தமிழக முதல்வர்.


[X] Close

[X] Close