Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சில்க்ஸ் தீ விபத்து...தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தே.மு.தி.க கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

விஜயாந்த்

சென்னை உஸ்மான் சாலையில் 7 மாடிகள் கொண்ட சென்னை சில்க்ஸ் துணிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் கீழ்தளத்தில் 30-ஆம் தேதி இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். துணிக்கடை என்பதால் தீ மளமளவென அனைத்து மாடிகளுக்கும் பரவியது. இதனிடையே நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஆறு மாடிகள் இடிந்து விழுந்தது. இருந்தாலும் தீ எரிந்துகொண்டுதான் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் இன்று காலையில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிலையில் "தீ விபத்துக்கான காரணத்தை தமிழக அரசு உடனடியாக கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேன்டும்" என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேலும் "இந்த விபத்து உண்மையிலையே தீ விபத்தால் ஏற்பட்ட நிகழ்வா அல்லது வியாபார ரீதியில் ஏற்பட்ட பொறாமையின் விளைவால் நிகழ்ந்ததா என்பதையும் தமிழக அரசு உடனடியாக கண்டுபிடித்து, அதற்கான தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கட்டிடம் விதிமீறி கட்டப்பட்டிருந்தால் அதற்கான உரிய நடவடிக்கையை எடுத்து, இனிவரும் காலங்களில் விதிமுறைக்கு மீறாக எந்த கட்டிடமும் கட்டாத அளவிற்கு, கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பே சிந்தித்து செயல்படவேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close