Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வேலூரில் கல்யாண கலாட்டா..! அண்ணனைத் தள்ளிவிட்டு மணமகளுக்குத் தாலி கட்டிய தம்பி

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், மணப்பெண்னின் கழுத்தில் தாலி கட்ட இருந்த அண்ணனைத் தள்ளிவிட்டு, தம்பி தாலி கட்டியுள்ளார்.  இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ரஞ்சித், ராஜேஷ், வினோத்  என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில்,  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், ராஜபாளையத்தைச் சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் ராஜேஷுக்கும் நிச்சயம்செய்துள்ளனர்.  நேற்று,  ராஜேஷுக்கும் காளீஸ்வரிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது, முகூர்த்த நேரத்தின்போது ஐய்யர் தாலியை எடுத்து மணமகனிடம் கொடுத்துள்ளார்.

மணமகன் ராஜேஷ், மணமகளுக்குத் தாலி கட்டச் சென்றபோது, அருகில் நின்ற சகோதரர் வினோத், மணமகனைத் தள்ளிவிட்டு, தான் மறைத்து வைத்திருந்த தாலியை மணமகளின் கழுத்தில் கட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணமகனின் உறவினர்கள், அவரை அடித்து உதைத்தனர். அப்போது, திருமணம் நிச்சயிக்கச் சென்ற நேரத்திலிருந்தே காளீஸ்வரியும் வினோத்தும் காதலித்துள்ளனர் என்பது தெரியவந்தது. திரைப்படத்தில் வருவது போன்ற இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement