சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மீண்டும் தீ!

சென்னை உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 மாடி கட்டடங்கள் கடும் சேதம் அடைந்ததோடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. இரண்டு நாள்கள் போராட்டத்துக்குப் பின்னர் தீயணைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் 7வது மாடியிலிருந்து 2வது மாடி வரை கட்டடங்கள் திடீரென இடிந்துவிழுந்தது. இதையடுத்து, அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார் ஆகியோர் கட்டடத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Chennai Silks

கட்டடம் அரசு சார்பில் இடிக்கப்படும் என்றும், இதற்கான செலவுத்தொகையைச் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை சில்க்ஸ் கட்டடம் அருகிலிருக்கும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும்பணியை மேற்கொள்ள ராட்சத இயந்திரம் கொண்டுவரப்பட்டது. கட்டட முன்புற இடிபாடுகளைக் குவித்து அதன் மீது ராட்சத இயந்திரத்தை நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கட்டடத்தின் இடிபாடுகளை ஒரே இடத்தில் குவிக்கும்பணியில் 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்தப் பணி நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கட்டடத்தை இடிக்கும்பணி இன்று காலை 11.15 மணிக்குத் தொடங்கியது. இரண்டு ராட்சத ஜா கட்டா வாகனங்கள் கொண்டு இடிக்கப்பட்டு வருகிறது.

Chennai Silks Fire
 

மூன்று நாள்களில் கட்டடம் இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 6, 7-வது தளத்தில் மீண்டும் தீ பரவியது. பின், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் கட்டடம் இடிக்கும் பணி சற்று நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!