Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைர விழா மலரைப் பார்த்து ரசித்த கருணாநிதி!

தனது சட்டப்பேரவை வைர விழா மலரை தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று ரசித்துப் பார்த்தார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வைர விழா மலரை அவருக்குக் காண்பித்தார்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவையின் வைர விழா மற்றும் பிறந்த நாள் விழா சென்னையில் நாளை பிரமாண்டமாக திமுக சார்பில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

சில நாள்களுக்கு முன்பு சட்டப்பேரவை வைர விழா அழைப்பிதழை கருணாநிதியிடம் நேரில் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிலையில், சட்டப்பேரவை வைர விழா மலரை இன்று கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் நேரில் காண்பித்தார். ஒவ்வொரு பக்கங்களாக ஸ்டாலின் காட்டினார். அதைக் கருணாநிதி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, கழுத்தில் கிடந்த துணியால் தனது வலது கையால் வாயை துடைத்தார் கருணாநிதி.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close