Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அரசு வழக்கறிஞர்களை நியமிக்க, அ.தி.மு.க. நிர்வாகிகள் மல்லுக்கட்டு!’ - திருவள்ளூர் தில்லுமுல்லு

உயர்நீதிமன்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இடையே மல்லுக்கட்டிவருகின்றனர்.

புதிதாக ஆட்சி அமையும்போது, நீதிமன்றங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதுண்டு. இந்தப்பதவிக்கு ஆளுங்கட்சி வழக்கறிஞர்களுக்கிடையே கடும் போட்டி நிலவும். வழக்கமாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியில் செல்வாக்கு உள்ளவர்கள் சிபாரிசு செய்யவர்கள்தான் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவார்கள். அ.தி.மு.க., தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றது. ஜெயலலிதா உடல்நலம் பாதிப்பு, மறைவு போன்ற காரணங்களால் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தள்ளிப்போனது. தற்போது, அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 25 நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் பட்டியலை கட்சித் தலைமை கேட்டுஇருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது, அரசு வழக்கறிஞராக ராம்குமார் உள்ளார். அவரது பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதனால், அந்தப்பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. திருவள்ளூர் மேற்கு மாவட்டச்செயலாளர் சிறுனியம் பலராமன், அரக்கோணம் எம்.பி. ஹரி, அமைப்புச் செயலாளர் ரமணா ஆகியோர், தங்களது ஆதரவாளர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியை பெற்றுக் கொடுக்க சிபாரிசு செய்துள்ளனர்.

இதுகுறித்து பெயரைக குறிப்பிட விரும்பாத அ.தி.மு.க.வினர் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முடிந்து விட்டது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் இழுபறியாக உள்ளது. இதற்கு அரசு வழக்கறிஞர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அரசு வழக்கறிஞர் ராம்குமாரும் கூடுதல் வழக்கறிஞர் சௌந்திரராஜனும் வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் இந்தப்பதவியை கைப்பற்ற பல்வேறு வகையில் முயற்சித்துவருகின்றனர். ஹரி எம்.பி, அரசு வழக்கறிஞரான ராம்குமாருக்கு சிபாரிசு செய்துள்ளார். அதுபோல மாவட்டச் செயலாளர் சிறுனீயம் பலராமன், உதயகுமாருக்கும் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரமணா, கூடுதல் அரசு வழக்கறிஞரான சௌந்தரராஜனுக்கு சிபாரிசு செய்துள்ளளனர். இவர்களைத் தவிர வேறு சிலரும் அரசு வழக்கறிஞர் பதவியைப் பெற காயை நகர்த்திவருகின்றனர். யாருக்கு பதவியை கொடுப்பது என்று தீவிர ஆலோசனையில் ஆளுங்கட்சியினர் உள்ளனர்" என்றனர்.  

அ.தி.மு.க.வட்டாரங்கள் கூறுகையில், “அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 50 ‘எல்’ முதல் 60 ‘எல்’ வரை பேரம் பேசப்படுகிறது. உயர்நீதிமன்றம் என்றால் ஒரு சி வரை கட்சியினர் வசூலிக்கின்றனர். இதனால் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பல்வேறு தில்லுமுல்லு நடக்கிறது. இதனால்தான் இந்தப்பதவிக்கு போட்டி நிலவுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் வசூல் பிரச்னையே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் சிக்கல் எழுந்துள்ளது" என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement