வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (02/06/2017)

கடைசி தொடர்பு:17:44 (02/06/2017)

தமிழக கிரிக்கெட் அணித்தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு! பிசிசிஐ-க்கு நோட்டீஸ்

16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில கிரிக்கெட் அணித் தேர்வை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தினேஷ் சார்பில் அவரது தந்தை தனிக்கொடி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில், மாவட்டத் தேர்வுகுழுவினர் திறமையற்றவர்களைத் தேர்வு செய்வதால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாநில அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. 2016-2017ஆம் ஆண்டு 16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அணித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது தொடர்பாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக கிரிக்கெட் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.