'சத்குரு'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறவங்கலாம் சத்குரு கிடையாது': இளையராஜா அதிரடி!

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை, காமராஜர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் ரமண மகரிஷி குறித்த பாடலை இளையராஜா பாடினார்.

Ilayaraja


இதையடுத்து இளையராஜா பேசுகையில், 'சத்குரு'ன்னு சொல்லிக்கிட்டு இருக்கிறவங்கலாம் சத்குரு கிடையாது. ரமண மகரிஷி ஒருவரே சத்குரு. நான் யாரையும் தவறாகப் பேசவில்லை. ரமண மகரிஷியின் பெருமையைக் குறித்துதான் பேசுகிறேன். அவர், ஆடு, மாடுகளுக்கெல்லாம் மோட்சம் கொடுத்தவர். கமல் என் சகோதரர். இதை நான் சொல்வதற்காகவே, நேரில் வந்து வாழ்த்து சொல்லியுள்ளார் அவர். ரஜினி எனக்கு போன்செய்து, 'வாழ்த்துகள் சாமி' எனக் கூறினார்', என்றார்.

கமல்ஹாசன் பேசுகையில், 'இளையராஜாவின் இசைமூலம் முகவரி கிடைத்தவன் நான். அவரை நேரில் வந்து வாழ்த்தும் பாக்கியம் கிடைத்துள்ளது. இன்னும் 300 ஆண்டுகளுக்கு இளையராஜா இசை இருக்கும். 'நடிக்க வாங்க' என்று அவரை நீண்ட நாள்களாக அழைத்து வருகிறேன். விரைவில் நடிக்க வருவார் என்று நம்புகிறேன்', என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!