Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாம்பு,தேள்களின் மத்தியில் போலீஸார்...சென்னையில் ஒரு திகில் போலீஸ் ஸ்டேஷன் !

 சென்னை அயனாவரம் போலீஸ் ஸ்டேஷன் பக்கம்  மாதத்தின் முதல்நாள் போனால், தவறாமல் இந்த டயலாக்கைக் கேட்டு வரலாம்... "ஹவுஸ் ஓனர் வந்தாருனா, கொஞ்சம் பக்குவமா பேசி அனுப்பிடுங்க ஏட்டய்யா... நான், இந்த வாரத்துல எப்படியும்  நம்ம ஸ்டேஷனுக்கு  நல்லதா ஒரு இடத்தைப் பார்த்துடுறேன்"  என்பதே அந்த டயலாக். கடந்த 1955 ஆம் ஆண்டு முதல் வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் அயனாவரம் காவல் நிலையத்தை வேறு  வாடகை இடத்துக்கோ அல்லது அரசின் சொந்தக் கட்டடத்துக்கோ மாற்றும் முயற்சியில் ஏறக்குறைய கால் நூற்றாண்டாகவே  போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

அயனாவரம்

"சார், ஹவுஸ் ஓனரே இந்த இடத்தை எங்களுக்காக விட்டுக்கொடுத்தாலும் எங்களுக்கு இங்கு வேலை பார்க்க துளியும் விருப்பமில்லை... குற்றவாளிகளைப் பாதுகாக்க, பாதுகாப்பான 'லாக்-அப்' இல்லை. எங்கள் வாகனங்களை நிறுத்திவைக்கவும் போதுமான இடம் இல்லை. எல்லாமே வெட்டவெளிதான்.  ஒரு காவல் நிலையத்துக்கான வசதியுடன் இந்தக் காவல்நிலையத்தை எங்களால் கட்டமைப்புச் செய்யவும் முடியாது.  ஏனென்றால், இது தனியார் இடம். இதுவரை முப்பது முறை, 'மாற்று இடத்தில் காவல்நிலையம் கோரும் மனு'  உயரதிகாரிகளுக்கு  அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது. 31-வது முறையாக இந்த வாரத்தில் புதிதாய் ஒரு மனு அளிக்கப்போகிறோம்" என்றனர் போலீஸார்.

அப்போது உள்ளே வந்த ஒரு சர்வீஸ் ஏட்டய்யா,  " சார் சுவரில் சாய்ந்து நிற்காதீங்க... சுவர் அப்படியே மேலே சாய்ந்தாலும் சாயலாம். தேள், பூரான் எதுனா சட்டையில ஒட்டிக்கலாம்... கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து நில்லுங்க" என்றவர், "பின்பக்கமா மட்டும் போயிடாதீங்க, இருக்கிறது போதாதுனு புதுசா ரெண்டு பாம்பு நேத்துதான் வந்து சேர்ந்திருக்கு" என்றார்.

காட்டின் அடர்த்தியை உள்வாங்கி நிற்கும் அயனாவரம் காவல்நிலையத்திலிருந்து விஷ பயத்துடன்  வெளியேறினேன்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement