Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை சில்க்ஸில் அணையாமல் எரியும் தீ! கட்டடம் இடிப்பதில் தாமதம்

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் இரண்டு மாடிகளில் இன்று மீண்டும் தீ பற்றி எரிவதால், கட்டடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில், மே 31ஆம் தேதி, அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தால், கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது. தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் இரண்டு நாள்களாகப் போராடி, தீயை அணைத்தனர். தீ விபத்தால் கட்டடங்கள் கடும் சேதமடைந்தன. மாடிகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதையடுத்து, கட்டடத்தைத் தரைமட்டமாக்க தமிழக அரசு முடிவுசெய்தது. அதன்படி, கட்டடத்தை இடிக்கும் பணி நேற்று காலை தாெடங்கியது. 'ஜா கட்டா' என்ற ராட்சச இயந்திரம்மூலம் கட்டடம் இடிக்கப்பட்டது. மேலிருந்து கட்டடத்தை இடிக்கும்போது, 7-வது மற்றும் 6-வது மாடியில் திடீரெனத் தீ பற்றி எரிந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் கட்டடம் இடிக்கும்பணி தொடங்கியது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன்,  தனியார் நிறுவன ஊழியர்கள் 120 பேர் ஷிஃப்ட் முறையில் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணிக்கு கட்டடத்தை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாளான இன்று காலை 8 மணிக்கு, கட்டடத்தை இடிக்கும்பணி தொடங்கியது. அப்போது, 7-வது மற்றும் 6-வது மாடியில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், கட்டடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement