நாடே திரும்பிப் பார்க்கும் அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி | We will announce new schemes for school education, says TN Minister sengottaiyan

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (03/06/2017)

கடைசி தொடர்பு:16:06 (03/06/2017)

நாடே திரும்பிப் பார்க்கும் அறிவிப்புகள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி

பள்ளி மாணவர்களின் நலன் கருதி 41 அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதிலிருந்து புதிய அறிவிப்புகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் ரேங்க் முறையை நீக்கினார். மேலும் 11-ம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 'பள்ளி மாணவர்களின் நலன் கருதி 41 புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி பெற்றபின் அந்த அறிவிப்புகள் வரும் 6-ஆம் தேதி வெளியிடப்படும். வெளியிடப்படும் அறிவிப்புகள் நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் இருக்கும்' என்று தெரிவித்தார்.