Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ.என்.ஜி.சி குழாய்க்கு எதிராக போராடியவர்கள் கைது... சீமான் எச்சரிக்கை!

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் குழாய்ப்பதிப்புக்கு எதிராகப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலம் கிராமத்தில் விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் ஓ.என்.ஜி.சி.யின் செயலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டபேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேர் பிணையில் வெளியில் வர முடியாத வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் செய்தி பெருத்த மனவேதனையையும், அளவற்ற பெருங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. மண்ணின் வளங்களைச் சூறையாடுவோர் மீதும், மக்களின் உழைப்பைச் சுரண்டுவோர் மீதும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீதும், சட்டம் ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிப்போர் மீதும் பாய வேண்டிய சட்டமும், வழக்குகளும் அவர்களையெல்லாம் விடுத்து, தங்களது உரிமைக்கானப் போராட்டத்தில் ஈடுபடும் ஏழை எளிய மக்களின் மீது பாய்கிறதென்றால் நாம் விரும்பித் தேர்ந்தெடுந்திருக்கிற ஆட்சியும், அதிகாரமும் யாருக்கானது என்பதைத் திறனாய்வு செய்ய வேண்டிய வரலாற்றுத் தருணமிது. 

கதிராமங்கலம் கிராமத்தில் ஏற்கனவே பதிக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்குழாய்களின் மூலமே விவசாயம் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டு, மக்கள் நிவாரணம் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிற நிலையில் தற்போது மீண்டும் எண்ணெய்க் குழாய்ப் பதிக்கும்    பணிகளை முடுக்கிவிட்டிருப்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுகிற செயலாகும். எனவே, மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மண்ணின் வளத்தைப் பாதிக்கும் அத்துணை நடவடிக்கைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள பொதுமக்களையும், சிறைப்படுத்தப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையேல்  மக்களின் மனங்களில் எரிந்து கொண்டிருக்கிற கோபக்கனலானது ஆட்சியாளர்களுக்கு எதிரான மாபெரும் மக்கள் புரட்சியாக இம்மண்ணில் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்' என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement