Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.டி.வி.தினகரன் கட்சிப் பணி குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து

கட்சியை டி.டி.வி.தினகரன் வழிநடத்துவது குறித்து தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கிலிருந்து டி.டி.வி.தினகரன் நேற்று ஜாமினில் வெளிவந்தார். அதன்பின்னர் பேசிய அவர், கட்சிப் பணிகளை கவனிக்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'நாங்கள் கூறிய 2 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே இரு அணிகளும் இணையும். பொதுச் செயலாளர் நியமணமே தவறாக இருக்கும் போது, தினகரன் எப்படி துணைப் பொதுச்செயலாளராக தொடர முடியும். உண்மையான அ.தி.மு.க நாங்கள் தான். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான். கட்சியை தினகரன் வழிநடத்துவது குறித்து தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement