Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி..!

கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநியின்  94-வது பிறந்தநாள் விழா நேற்று வைரவிழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு இந்திய அளவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இன்று காலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடித்த பின்னர் சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தார். ராகுல் காந்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாயிலில் சென்று வரவேற்றார். ராகுலுடன் திருநாவுக்கரசர், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர். 

 

கருணாநிதியை சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'கருணாநிதியை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. நான் முன்னர் பார்த்ததைவிட அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அது மகிழ்ச்சியைத் தருகிறது. காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் மோடி தவறாக கையாள்கிறார். காஷ்மீர் இந்தியாவின் பகுதி. காஷ்மீர் இந்தியாவைப் பலப்படுத்துகிறது' என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement