ஆண்ட்ராய்டு நௌகட், ₹ 5,999 விலை... ரெட்மி ரெக்கார்டை உடைக்குமா மோட்டோ C? #MotoC | Will Moto C model break Redmi record on sales

வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (04/06/2017)

கடைசி தொடர்பு:18:07 (04/06/2017)

ஆண்ட்ராய்டு நௌகட், ₹ 5,999 விலை... ரெட்மி ரெக்கார்டை உடைக்குமா மோட்டோ C? #MotoC

'6,000 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு 4G போன்' என்ற ஒரே கண்டிஷனுடன் இந்திய மார்க்கெட்டிற்கு வந்திருக்கிறது மோட்டோ C. ஐபோன் 7, கூகுள் பிக்ஸல், சாம்சங் S8+ போன்ற ப்ரீமியம் ரக போன்களை விடவும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்குபவை 10,000 ரூபாய் பட்ஜெட்டிற்குள் சந்தைக்கு வரும் பட்ஜெட் மொபைல்கள்தான். குறைந்த விலை, நிறைய வசதிகள், ஆன்லைன் ஷாப்பிங் என வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இருப்பதால், இந்த பட்ஜெட்டிற்குள் வரும் ஸ்மார்ட்போன்களுக்குத்தான் அதிக லைக்ஸ் கிடைக்கின்றன. அதுவும் அடிக்கடி மொபைல் மாற்றுவோர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துவிட்டதால் பலரும் குறைந்த பட்ஜெட் போன்களையே குறிவைக்கின்றனர். அவர்களை திருப்திபடுத்தவே இந்த செக்மெண்டில் நிறைய போன்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் ஹிட் அடித்த ரெட்மி, யுரேகா போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தற்போது அந்த வரிசையில் புதிதாக களமிறங்கியிருக்கிறது மோட்டோ C.

மோட்டோ C

சில மாதங்களுக்கு முன்னர் ஜியோமி அறிமுகம் செய்த ரெட்மி 4A மாடலுக்கு நிகரான விலையில் வெளிவந்திருக்கிறது மோட்டோ C. 5 இன்ச் டிஸ்ப்ளே, 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி ரோம், Snapdragon 425 பிராஸசர், 3120mAh பேட்டரி என 6,000 ரூபாய் பட்ஜெட்டிற்கு பக்காவாக இருக்க, ரெட்மி 4A மார்க்கெட்டில் ஹிட் அடித்தது. அதற்கு பின்னர் ரெட்மி சீரிஸில் 7,000 ரூபாய் விலையில் ரெட்மி 4 மாடலையும் களமிறக்கி காலரைத் தூக்கிவிட்டது ஜியோமி. அந்த ஃபார்முலா மோட்டோவுக்கும் செட் ஆகுமா?

மோட்டோ C-யில் என்ன இருக்கிறது?

Moto C மற்றும் Moto C ப்ளஸ் ஆகிய இரு மொபைல்களையும் மார்ச் மாதம்தான் லெனோவா நிறுவனம் லத்தீன் அமெரிக்கா, ஆசிய-பசிபிக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்தது. அதில் Moto C மாடலை மட்டும் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்திருக்கிறது. 

Moto C

5 இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜி.பி ரேம், 16 ஜி.பி இன்டர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ்., 4G VoLTE, டூயல்சிம் வசதி, 2350 mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது மோட்டோ C. இன்டர்னல் மெமரியை 32 ஜி.பி வரை மெமரி கார்டு மூலம் நீட்டித்துக் கொள்ளலாம். ரெட்மியோடு ஒப்பிட்டால் இந்த வசதிகள் அனைத்தும் குறைவு. கேமரா விஷயத்திலாவது கொஞ்சம் பாஸ் செய்திருக்கலாம். ஆனால் 5 மெகா பிக்ஸல் ரியர் கேமரா, 2 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா என அதிலும் சுமாராகவே இருக்கிறது மோட்டோ. ஆனால் 6,000 ரூபாய் மாடல் ஆன ரெட்மி 4A-விலேயே 13 எம்.பி ரியர் கேமரா மற்றும் 5 எம்.பி முன்பக்க கேமரா இருக்கும் நிலையில், லெனோவா இவற்றை கொஞ்சம் மேம்படுத்தியிருக்கலாம். ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ் என்பதும், விலையும்தான் இதன் ப்ளஸ். ஆனால் கூடுதல் சிறப்பம்சங்கள் என எதுவுமே இல்லை என்பது மைனஸ்.

மோட்டோ சி

எனவே மோட்டோ C, பட்ஜெட் மொபைல்களின் வரிசையில் வந்தாலும், ரெட்மி 4 மற்றும் ரெட்மி 4 போன்ற மொபைல்களின் ஹிட் ரெக்கார்டைப் பிடிப்பது என்பது மிகக்கடினம். இந்த மொபைலை ஆஃப்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம். இந்தியாவில் பேர்ல் வொயிட் மற்றும் ஸ்டாரி பிளாக் என இரு நிறங்களில் கிடைக்கிறது. 

விலை : ₹ 5,999 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்