வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி  அறிவித்த முதல்வர் !

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்துக்கு  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  20 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

palanisamy
 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

’ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், தேப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த  கோபால் என்பவரின் மகன் .மணிவண்ணன் நேற்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் மணிவண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ  மணிவண்ணன் அவர்களின் குடும்பத்திற்கு இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’ 

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!