வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (05/06/2017)

கடைசி தொடர்பு:16:26 (05/06/2017)

காயிதே மில்லத்தின் 122-வது பிறந்தநாள் விழா - முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

காயிதே மில்லத்தின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காயிதே மில்லத் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக கருதப்பட்டார். அவர், ராஜாஜி, அண்ணா, கருணாநிதி என அனைத்து தலைவர்களுடனும் இணக்கமாக இருந்து வந்தார். அவருடைய பிறந்தநாள் ஆண்டு தோறும் தமிழக அரசின் சார்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று அவருடைய 122-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருடைய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதிஅமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னர் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.