Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூருவில் அதிரடி காட்டிய டி.டி.வி.தினகரன்!

 

 

அமைச்சர்கள், ஏதோ பயத்தில் இருப்பதாக பெங்களூருவில் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி பேட்டியளித்தார்.


பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திப்பதற்காக, டி.டி.வி.தினகரன்  இன்று பெங்களூரு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, 'அமைச்சர்கள் ஏதோ பயத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் என்னை விலகி இருக்கச் சொன்னார்கள். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற தொண்டர்கள் என்னை அழைக்கிறார்கள். அ.தி.மு.க-வின் ஒற்றுமைக்காக கடினமாக உழைப்பேன். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு என்னால் எந்தப் பாதிப்பும் வராது. கட்சியின் பொதுச்செயலாளர் அறிவுரையை ஏற்று செயல்படுவேன். அதற்காகவே இங்கு வந்துள்ளேன். என்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. நான் தொடர்ந்து கட்சிப் பணி ஆற்றுவேன்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement