விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சோகம்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்பேத்தி பகுதியைச் சேர்ந்தவர், விஸ்வநாதன். 48 வயதான இவர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருச்சி மாநகர மதுவிலக்குப் பிரிவில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவை முன்னிட்டு, சில நாள்களுக்கு முன் விடுப்பில் சென்ற இவர், இன்று காலை ஜெகதாபட்டினத்தை அடுத்த பாக்கம் என்ற ஊரிலுள்ள ஐயனார் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார். திருவிழா முடிந்து, தன் உறவினர்களோடு பேசிக்கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்தார்.

 மயங்கி விழுந்த விஸ்வநாதனை, மணமேல்குடி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதனைசெய்த மருத்துவர்கள், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரின் உடல், பொன்பேத்தி கிராமத்திலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இறந்த இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!