முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே அமைச்சர்கள் திடீர் ஆலோசனை! கலகலக்கும் தலைமைச்செயலகம்

முதல்வர் பழனிசாமி இல்லாமலேயே சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

jayakumar
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவுபட்ட அ.தி.மு.க. மீண்டும் இணையும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே போகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இரு அணிகளுக்குள்ளும் மீண்டும் பனிப்போர் நடந்துவருகிறது. கட்சி இணைப்புகுறித்த பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.  கட்சி நிர்வாகம், பதவி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சிக்கல் நிலவிவருகிறது. 

அ.தி.மு.க மீண்டும் இணைய வேண்டுமென்றால், டி.டி.வி.தினகரனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஓ.பி.எஸ் அணி முன்வைத்தது. அதற்கு, எடப்பாடி அணியும் ஒப்புக்கொண்டது. ஆனால், தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டுமே உள்ளது என்று ஜாமீனில் வெளிவந்த  டி.டி.வி.தினகரன் அதிரடியாகத் தெரிவித்தார். இன்று, பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவைச் சந்திக்கச் சென்றுள்ளார். தற்போது, பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் டி.டி.வி.தினகரன் ஒரு எம்.பி, 6 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்து வருகிறது.

இந்தக் குழப்பமான சூழலில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், செங்கோட்டையன், சீனிவாசன், செல்லூர் ராஜூ, காமராஜ், தங்கமணி, வளர்மதி, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்  உள்ளிட்ட 19 அமைச்சர்கள் அவசரமாகக் கூடி, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். தலைமைச்செயலகத்திலுள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் அறையில் ஆலோசனை நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில், முதல்வர் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!