வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (05/06/2017)

கடைசி தொடர்பு:18:00 (05/06/2017)

பரோல் கோரி சசிகலா திடீர் மனுத் தாக்கல்!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான் ஆண்டுகள் சிறைத் தண்டனைபெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருக்கும் சசிகலா, பரோல் கேட்டு மனுத் தாக்கல்செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனைபெற்றுவருகின்றனர். சசிகலா சிறைக்குச் சென்றதை அடுத்து, டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற வழக்கில் அவரும் கைதாகி,  திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சில நாள்களுக்கு முன்னர் தினகரன் பிணையில் வெளிவந்ததை அடுத்து, சசிகலா பரோல் கோரி மனுத் தாக்கல்செய்துள்ளார்.