வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (05/06/2017)

கடைசி தொடர்பு:16:11 (05/06/2017)

மூன்று பேர் கொலையில் இரண்டு பேருக்குத் தூக்கு தண்டனை... நாமக்கல் நீதிமன்றம் அதிரடி!

மூன்று பேரைக் கொன்ற இருவருக்குத் தூக்குத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. 


கடந்த 2011-ம் ஆண்டில் கல்லூரி உதவிப் பேராசிரியர் சிந்து உள்பட மூவரை இளங்கோ மற்றும் காமராஜ் கொடூரமாகக் கொலை செய்தனர். இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில் இளங்கோவும் காமராஜும் வசமாக பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்த நிலையில், இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து நாமக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.