நான்கு பேரின் உயிரைப் பலிகொண்ட வடபழனி தீ விபத்து : கட்டட உரிமையாளர் கைது! | Vadapalani Fire accident : Building owner arrested

வெளியிடப்பட்ட நேரம்: 19:37 (05/06/2017)

கடைசி தொடர்பு:19:52 (05/06/2017)

நான்கு பேரின் உயிரைப் பலிகொண்ட வடபழனி தீ விபத்து : கட்டட உரிமையாளர் கைது!

சென்னை வடபழனியில் மே மாதம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாகக் கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

vadapalani fire
 

வடபழனி அடுக்குமாடிக் குடியிருப்பில் மே மாதம் 8 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தெற்கு சிவன் கோவில் தெருவில் மின்கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது. புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
 
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்ட கட்டட உரிமையாளரான விஜயகுமாரைப் போலீசார் இன்று கைது செய்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க