Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'யாரும் தினகரனை அதிகாரபூர்வமாக விலக்கிவைக்கத் தயாரில்லை!'- புலம்பும் மைத்ரேயன்

ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருக்கும்  எம்.பி மைத்ரேயன், 'தினகரனை யாரும் அதிகாரபூர்வமாக விலக்கிவைக்கத் தயாராக இல்லை' என்று தெரிவித்துள்ளார். 

மைத்ரேயன்

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 19 அமைச்சர்கள் இன்று திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த அவசர ஆலோசனையைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘முன்னர் அறிவித்தபடி டி.டி.வி.தினகரனுக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சசிகலா, தினகரன் குடும்பத்துக்கும் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களைச் சார்ந்து நாங்கள் இல்லை. அவர்களில்லாத நல்லாட்சி தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தினகரன் ஒதுங்க வேண்டும்' என்று கொட்டித் தீர்த்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 'என்னை ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. கட்சியிலிருந்து நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. என்னைக் கட்சியைவிட்டு ஒதுங்கச் சொல்லும் அதிகாரம் வேறு யாருக்குமில்லை. பொதுச்செயலாளர் பதவியைத் தானாக கையில் எடுத்துக்கொண்டுள்ளார் மாண்புமிகு ஜெயக்குமார். அவருக்கு என்னை ஒதுங்கச் சொல்லும் அதிகாரமில்லை' என்று பேசியுள்ளார். 

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், 'இவர்களும் ஒதுக்குகிறோம், ஒதுக்குகிறோம் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தினகரனை அதிகாரபூர்வமாக கட்சியிலிருந்து விலக்கி வைக்க யாரும் தயாராக இல்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காக இப்போது தமிழ்நாட்டில் தினகரன் அணிக்கும் பழனிசாமி அணிக்கும் இடையில் அதர்ம யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது', என்று இரு தரப்புக்கும் சேர்த்து பதிலளித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement