Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“90% மக்கள் ஊரைவிட்டு வெளியேறிட்டாங்க..!” - எண்ணெய் எடுக்கும் முயற்சியால் கதிராமங்கலம் கிராமம் தவிப்பு

கிராமம்

காவிரி டெல்டா கிராமம் மற்றும் பேரூராட்சிகள் அனைத்திலும் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெட்ரோல், கேஸ் எடுத்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக இங்குள்ள மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.ஒ.என்.ஜி.சி-க்கு எதிரான போராட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் இத்தகைய போராட்டங்களை கடுமையான ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது தமிழக அரசு. பிரதமர் நரேந்திர மோடியையும் மத்திய அரசையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் குற்றம்சாட்டுகிறார்கள். 

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கதிராமங்கலம்  தற்பொழுது நிம்மதி இழந்து பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது. இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின்  எரிவாயு-எண்ணெய் கிணறுகளை சீரமைப்பதற்காகவும் புதிய குழாய்களை பதிப்பற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ள அதிநவீன ராட்சத இயந்திரங்களை கண்டு அச்சமடைந்த இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும்  இதற்கு ஏதிர்ப்பு  தெரிவித்து போராட்டங்களில் இறங்கினர். ஏற்கனவே இங்கு செயல்பட்டுவரும் எரிவாயு-எண்ணெய் கிணறுகளால் நிலத்தடிநீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு மீத்தேன் எடுப்பதற்கான அபாயம் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்திலையில் ஜூன் 2-ம்தேதி ஆயிரத்திற்கு அதிகமான காவல்துறையினர் இங்கு குவிக்கப்பட்டு, எரிவாயு-எண்ணெய் கிணறு சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்கிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஒ.என்.ஜி.சி மற்றும் காவல்துறையினரின் அத்துமீறல்களை கண்டித்து இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள். இதனை கிழித்தெறிந்த காவல்துறையினர், இக்கிராம மக்களை அநாகரிகமான முறையில் மிரட்டியுள்ளார்கள். தனது பெயரை வெளியிட விரும்பாத  இப்பகுதி விவசாயி ஒருவர், ‘எங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. வெளியில சொல்லவே அவமானமா இருக்கு. போலீஸ்காரங்க எங்க வீடுகளுக்குள்ள புகுந்து மிரட்டுறாங்க. ஒவ்வொரு தெருவுலயும் பேரிகாட் [இரும்பு தடுப்பு அரண்]  அமைச்சி, வெளியில போக முடியாத அளவுக்கு நெருக்கடி கொடுக்குறாங்க. ஒ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு தெரிவிச்சு, தீவிரமா பேசுறவங்க மேல காவல் துறை ஏதாவது வழக்குப் போட்டு கைது பண்ணவும் சூழ்ச்சி நடக்குது. 90சதவீதம் மக்கள் ஊரை விட்டு வெளியேறிட்டாங்க. சொந்த மண்ணிலேயே நாங்க அடிமையா இருக்கோம்.” என ஆதங்கப்பட்டார்.

பெ. மணியரசன்

பெரும் மன உளைச்சலிலும் பயத்திலும் இருக்கும் இப்பகுதி மக்களுக்கு நம்பிக்கையூட்டவும் ஆறுதல் சொல்லவும் பெ. மணியரசன் தலைமையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் இங்கு செல்ல முயன்றனர். இவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தார்கள். செய்தியாளர்களிடம் பேசிய பெ. மணியரசன் “இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மக்கள் மீது அடக்குமுறையை ஏவுவது ஆட்சியாளர்களுக்கு ஆரம்பத்தில் சுகமாகவே இருக்கும். பின்னர் இதுவே அவர்களுக்கு சோகமாக மாறிவிடும். தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தங்களை தாங்களே வீழ்த்திக் கொள்ளும் செயல் இது. பிரதமர் நரேந்திர மோடியை மகிழ்விக்க, இங்கு அடக்குமுறையை கையாள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.” என கொந்தளித்தார் மணியரசன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement