சென்னையில் திடீர் மழை... மணமணக்கும் மண் வாசனை!

பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதுமே வெயில் வாட்டிவதைத்துவருகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பிருந்தே கடுமையான வெயில் நிலவி வந்தது. இதையடுத்து, அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு, வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்தது.

Rain Chennai


இதனால் மக்கள் அவதிப்பட்டனர். அக்னி நட்சத்திரம் காலகட்டம் கடந்த மாதம் 28-ம் தேதியுடன் முடிந்தது. மேலும், அதே காலகட்டத்தில் கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதனால், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. ஆனால், சென்னையில் வெயிலின் தாக்கம் தொடர்வதால், சென்னை வாசிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


 இந்நிலையில், சென்னை சென்ட்ரல், மெரினா, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை,  பெரம்பூர்,  மாதவரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தற்போது லேசான மழை பெய்துவருகிறது. முக்கியமாக சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மண் வாசனை மணக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!