முன்னாள் எம்பி., இரா.செழியன் காலமானார்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.செழியன் (95), உடல்நலக்குறைவால் வேலூரில் காலமானார். அரசியல்வாதி, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக்கொண்டவர். இவர் பிறந்த ஊர், திருவாரூர். ஜனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி ஆவார். சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

sezhiyan

மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது, அண்ணாதுரையுடன் நெருக்கமாகப் பழகினார். அவரைத்  தலைவராகவும் வழிகாட்டியாகவும்கொண்டு அரசியல் வாழ்வை நடத்தினார்.

1962, 1967 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். 1977ஆம் ஆண்டு தி.மு.க-விலிருந்து விலகி, ஜனதா கட்சியில் சேர்ந்து இந்திய அரசியலில் ஈடுபட்டார். 1978ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.

1988ஆம் ஆண்டு ஜனதா கட்சி உடைந்து, வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் என்னும் கட்சி தோன்றியது. ஜனதா தளத்தில், செழியன் முக்கியப் பொறுப்பு வகித்தார். ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில் லோக் தளம் உருவானது. செழியன், அந்தக் கட்சியில் துணைத் தலைவர் ஆனார். 2001ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!