இன்னும் எத்தனை அணிகளாக உடையும் அ.தி.மு.க! மு.க.ஸ்டாலின் கலகல

ஈரோடு மாவட்டம், திண்டல் அருகே காரப்பாறையிலுள்ள குளத்தை தி.மு.க-வினர் தூர்வாரினர். 10 ஏக்கரில் குளம் தூர் வாரப்பட்டது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அந்தக் குளத்தை ஆய்வுசெய்தார். 

stalin
 

அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ‘சட்டப்பேரவை கூடுவதற்குள் அ.தி.மு.க ஆட்சி நிலைக்குமா என்பது கேள்விக்குறி. தற்போது அ.தி.மு.க மூன்று அணிகளாக உள்ளன. மேலும் எத்தனை அணிகளாக உடையும் எனத் தெரியவில்லை. ஆட்சி நிலைத்து பேரவை கூடினால், தி.மு.க., தன் ஜனநாயகக் கடமையை ஆற்றும்’ என்று தெரிவித்துள்ளார்.
 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிளவுப்பட்ட அ.தி.மு.க., தற்போது மூன்று அணிகளாகப் பிரிந்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி மற்றும் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அணி என மூன்று அணிகள் உருவாகிவிட்டன. இதனிடையே, ஜெயலலிதா அண்ணன் மகள் தலைமையில் ஒரு அணி உள்ளது. இந்தச் சூழலை விமர்சித்துள்ள ஸ்டாலின், ’அ.தி.மு.க இன்னும் எத்தனை அணிகளாக உடையுமோ தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!