வெளியிடப்பட்ட நேரம்: 14:36 (06/06/2017)

கடைசி தொடர்பு:14:46 (06/06/2017)

தினகரன் பக்கம் சாயும் எம்எல்ஏ-க்கள்... களமிறங்கினார் முதல்வர் பழனிசாமி!

தலைமைச்செயலகத்தில் இன்று ஒன்பது மாவட்ட அ.தி.மு.க எம்எல்ஏ-க்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளார். இன்று முதல் வரும் வியாழன் வரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

edappadi
 

டி.டி.வி.தினகரனை நேற்று 11 எம்எல்ஏ-க்கள் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மேலும் ஏழு எம்எல்ஏ-க்கள் சந்தித்தனர். தினகரனுக்கு அணிக்கு செல்லும் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

இந்தச் சூழலில், எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க முடிவெடுத்துள்ளார். முதற்கட்டமாக தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற உள்ள  கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது  மாவட்ட அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் பங்குபெறுகின்றனர். இன்று மாலை 3 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. 

இதனிடையே வரும் 14 ஆம் தேதி துவங்க உள்ள  சட்டப்பேரவை கூட்டத்தொடர்  பற்றி ஆலோசிக்க சபாநாயகர் தனபாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க