வெளியிடப்பட்ட நேரம்: 15:26 (06/06/2017)

கடைசி தொடர்பு:15:26 (06/06/2017)

'தி.மு.க-வின் அடுத்த தலைவராக இவர்தான் வரவேண்டும்!' யாரைக் குறிப்பிடுகிறார்கள் மக்கள்? #VikatanSurveyResults

தி மு க செயல்தலைவர் ஸ்டாலின்

தி.மு.க-வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழக மக்களிடம் தன்னுடைய செயல்பாட்டை நிரூபிக்கத் தன்னால் முடிந்தவரை அனைத்துச் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இருந்தாலும், அவரின் செயல்கள் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை என்பது சமூக வலைதளங்களில் பரவிவரும் ஒரு கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில், கருணாநிதி பிறந்தநாள் விழாவும், அவருடைய சட்டமன்ற வைரவிழாவும் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி நடைபெற்றது. அதில், கலந்துகொண்ட தேசியத் தலைவர்கள் அனைவரும், "கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் அந்த இடத்தைப் பிடிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். இதுதொடர்பாக நேற்று (05.06.2017) "தி.மு.க-வின் அடுத்த தலைவராக ஸ்டாலினை ஏற்பீர்களா" என்ற தலைப்பில் சர்வே நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் ஸ்டாலின் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? இதோ அவர்களின் கருத்துகள்...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

 

சர்வே முடிவுகள்

தி.மு.க-வை ஸ்டாலின் தலைமையேற்று வழிநடத்துவது உறுதியாகியுள்ளது. கருணாநிதி போன்று ஒரு தலைவராகச் செயல்பட ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்? (ஓரிரு வரிகளில் பதிலளிக்கவும்)

*மக்கள் மன நிலை அறிந்து செயல் பட வேண்டும்.

*Working hard for the welfare of the people with corruption free administration.

*கட்சிக்குள் அனைவரையும் அரவணைத்து செல்தல்.தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடுதல்.பேச்சில் இன்னும் மெருகேற்றுதல் அதாவது மனபூர்வமாக உரையாட வேண்டும் பேப்பரைப் படிக்காமல்.

*எதிரிகளின் அரசியல் திட்டத்தை முன்னமே அறிந்து அதை முறியடிக்க/எதிர்கொள்கின்ற ராஜதந்திர வியூகங்களை கலைஞர் போன்று வகுக்க வேண்டும்.

*He should act like him in controlling party as well as outside. He should not allow his MLAs how they behaved in assembly.

*More aggressive is required & to fight people's problem at the core. 

*அவர் சரியான திசையில் செல்கின்றார்...

*1970 களில் இருந்த கலைஞரின் எதிர்ப்பு அரசியலும்,1990 களில் இருந்த கலைஞரின் அரவணைப்பு,நிர்வாக திறன் அரசியலும் கலந்தும் 2000 களில் இருந்த கட்டுப்பாடற்ற,சுயநல தன்மை நீக்கியும் இருக்க வேண்டும்...  

*தன் தந்தையை பின்பற்றாமல் அவர் வழியில் செயல்பட வேண்டும்.

*விமர்சனங்களை புறம் தள்ள வேண்டும்.

*பிரச்னை குறித்து அறிக்கைகள் விடுவதோடு களத்தில் தீவரமாக இறங்கி போராடி பிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும். 

*கருணாநிதிக்கு  நிகர் கருணாநிதி  தான், ஸ்டாலின் அவருக்கான வழியில் சிறப்பாக செயல் படுவார் எதிர் பார்க்கிறோம், ஸ்டாலின் ஒரு சிறந்த நிர்வாகி.

*கலைஞருக்கு ஈடாகாது..அடுத்த தலைவருக்கான அனனத்து தகுதிகளையும் அவர் வளர்த்து கொண்டார்...அவர் தான் ஸ்டாலின்... குடும்பத்தின் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும் கழகம் இன்னும் மிளிரும்!!!!

*அனைத்துத் தோழமைக் கட்சிகளையும் மற்றும் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். தமிழைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். சமூக நீதியைக் காக்க வேண்டும். இயற்கை வளங்களைச் சூறையாடும் ஊழல் நிறுவனங்களையும் அரசியல் வாதிகளையும் ஒடுக்க வேண்டும். குடும்ப அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்த அரசுத் திட்டங்கள் வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமை தரப்படவேண்டும். விவசாயிகள் நலம் பேண வேண்டும். சாதி சமயச் சண்டைகளைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க வேண்டும்.  

*வசதியற்ற இளைஞர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கள் கொடுக்கணும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை மட்டுமே இங்கே பிரசுரித்துள்ளோம். வாசகர்களின் கருத்துகளோடு நீங்கள் முரண்பட்டால், அவற்றை பின்னுட்டமாக இடுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்