கத்தார் தடை விவகாரம் : சுஷ்மாவுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய கோரிக்கை!

கத்தாரில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா  சுவராஜூடம் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

sushma, stalin

இது தொடர்பாக சுஷ்மாவுக்கு, மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ’கத்தார் உடனான உறவுகளை அரபு நாடுகள் துண்டித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், கத்தாரில் வாழும் இந்தியர்களின் நிலை தெரியாமல் இங்குள்ள அவர்களின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர். அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்யவேண்டும். இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கத்தார் தலைநகரம் தோஹாவில் உள்ள தூதரகத்தைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!