வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 20 வரை காவல் நீட்டிப்பு..!

வேந்தர் மூவிஸ் மதனுக்கு ஜூன் 20-ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வேந்தர் மூவிஸ் மதன்


எஸ்.ஆர்.எம். கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாயை மதன் மோசடி செய்ததாகப் புகார் வந்தது. இந்தப் புகாரின் பேரில் மதனை காவல்துறையினர் பல இடங்களில் தேடி வந்தனர். இறுதியில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த மதனை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் புழல் சிறையில் கைதிகளிடம் பணம் அதிகளவு புழங்குவதாகச் சிறையின் விஜிலென்ஸ் பிரிவினருக்குக் கடந்த மார்ச் மாதம் தகவல் வந்தது.

இதையடுத்து, ஒவ்வொர் அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதன் அறையில் சோதனை நடத்தியபோது, 15 ஆயிரம் ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது. பணமோசடி வழக்கில் ஜாமீன் கிடைத்து வெளியிலிருந்த நிலையில் மீண்டும் அமலாகத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. மதனின் காவலை ஜூன் 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!